தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். என்ன தான் டாப் ஹீரோவாக இருந்தாலும், விஜய் மீது மத ரீதியான சாயம் பூசப்படாமல் இல்லை. மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பாக வசனம் வைத்தார் என்பதற்காகவே பாஜகவினர் அவரை கடுமையாக விமர்சித்தனர். அக்கட்சியின் மூத்த தலைவரான எச்.ராஜா ஒருபடி மேலே போய் ‘ஜோசப் விஜய்’ என விஜய்யை மத ரீதியாக அடையாளப்படுத்தி பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
பல்வேறு கண்டனங்கள் எழுந்த போதும், எச்.ராஜா தொடர்ந்து தளபதி விஜய்யை ஜோசப் விஜய் என்று தான் அழைத்து வருகிறார். இந்நிலையில் பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யின் சாதி, மதம் குறித்து பேசியுள்ளது எச்.ராஜாவிற்கு நெந்தியடி பதிலாக அமைந்துள்ளதாக தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற சாயம் படத்தின் ஆடியோ வெளியிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்.ஏ.சந்திரசேகர், பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போது சாதி, மதம் என்ற இடத்தில் தமிழன் என்று பூர்த்தி செய்து கொடுப்பதை அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுத்தினால் மட்டுமே சாதி ஒழியும் என்றும், விஜயை பள்ளியில் சேர்க்கும் போது சாதி, மதம் என்ற இடத்தில் தமிழன் என்று பூர்த்தி செய்து கொடுத்தேன் என்றும் பேசியுள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.