



மற்ற மாநிலத்தவரை தரக்குறைவாக பேசுவதோடு சகோதரத்துவம் இல்லாமல் பேசுகிறார்கள் நமது மாநிலத்தைச் சார்ந்தவர்களும் பிற மாநிலங்களில் வேலை செய்கிறார்கள் அவர்களும் இப்படி பேச ஆரம்பித்தால் என்னவாகும் என்று தமிழிசை கூறினார்.
சென்னை மீனம்பாக்கத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டிபேட்டியில் கூறியதாவது,

சென்னை மீனம்பாக்கம் தனியார் கல்லூரியில் அனைவரும் சமம் நிறம் மொழி வேறுபாடு கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது,
“ஆர் எஸ் பாரதி போன்றோர் திமுக இல்லை என்றால் நாங்கள் எல்லாம் படித்திருக்க முடியாது என கூறுகிறார்கள். நான் கஷ்டப்பட்டு படித்து அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்று அயல்நாடு வரைக்கும் சென்று படித்து வந்துள்ளேன். நீங்கள் எங்களை பார்த்து கூறுகிறீர்கள் கோட்டாவில் வந்தோம் என்று உதயநிதி எந்த கோட்டாவில் வந்தார்.

அப்படிப்பட்டால் இட ஒதுக்கீட்டில் வரும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின மக்களை நீங்கள் அவ்வாறு கூறுகிறீர்களா? திமுக இல்லை என்றால் யாரும் படித்திருக்க முடியாது என்று கூறி அவரவர் அறிவை குறைத்து மதிப்பிடுகிறீர்களா? கேள்வி கேட்க வேண்டுமென்றால் எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம் நாங்கள் நாகரிகம் இல்லாமல் பேச மாட்டோம்…
முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து ஒரு கோரிக்கை வைக்கிறேன் முதலில் உங்கள் அமைச்சர்களை மரியாதையாக பேச சொல்லுங்கள் ஆர் எஸ் பாரதி என்னை கோட்டோவில் வந்தவர் எனக் கூறுகிறார் பெண்களை எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அது இது என்று தான் பேசுகிறார்கள் திமுகவினர் அப்படிதான் பெண்களை மதிக்கிறீர்களா அண்ணன் துரைமுருகன் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் மற்றவர்களை பற்றி கேவலமாக பேசுகிறார் அவர்கள் தலைவர்கள் எல்லாம் அப்படித்தான் வாழ்ந்தார்களா?
அதுபோன்று வடமாநிலத்தைச் சார்ந்தவர்களும் பிச்சை எடுக்கிறார்கள் பீடா விற்கிறார்கள் என கூறுகிறார்கள் அவர்களும் ஒரு மாநிலத்தைச் சார்ந்தவர்கள் நமது மாநிலத்தில் வந்து வேலை செய்கிறார்கள் இதேபோன்று நமது மாநில தவறுகளும் பிற மாநிலங்களுக்கு சென்று வேலை செய்கிறார்கள் அவர்களும் நமது சகோதர சகோதரிகள் பிற மாநிலத்தவர்களும் இது போன்று பேச ஆரம்பித்தால் என்ன நடக்கும் சகோதரத்துடன் வாழ பழகுங்கள் தொகுதி மறு சீரமைப்பில் பாதிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்து விட்டது முதலமைச்சர் தினம் ஒரு படப்பிடிப்பு நடத்துகிறார் பொய்யை திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது என்னுடைய கருத்து.
சட்டமன்றத்தில் பேச அனுமதிப்பதில்லை என்பது குறித்து கேட்டபோது
எங்கள் கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களும் பலமுறை கூறியிருக்கிறார்கள் சகோதரி வானதி ஸ்ரீநிவாசன் சொல்லி இருக்கிறார் சட்டமன்றத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை என்று
நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசினார்கள் என பெருமையாக கூறிக் கொள்கிறார்கள் இதுதான் அவர்களின் தமிழ் பற்று.
எத்தனை திமுகவினர் எப்படி பேசுகிறார்கள்? அண்ணன் திருமாவளவன் கொடியேற்ற முடியவில்லை எனக் கூறுகிறார் கூட்டணியில் இருக்கும் வேல்முருகன் என்னால் சட்ட மன்றத்தில் பேச முடியவில்லை எனக் கூறுகிறார் அதற்கு முதலில் பதில் கூற சொல்லுங்கள்.
தொடர் கொலை சம்பவங்கள் குறித்து கேட்ட பொழுது,
முதல்வர் கூறும் பதிலில் இருந்து நான் மாறுபடுகிறேன் ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீடியோ பதிவு செய்துவிட்டு அதன் பிறகு கொலை செய்யப்படுகிறார் என்றால் எவ்வளவு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. திடீரென நடந்த கொலை நடந்தால் பரவாயில்லை திட்டமிட்டு கொலை நடைபெற்றிருக்கிறது. இப்படி இருக்கும்பொழுது சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று எப்படி பேச முடியும். முதல்வர் அவர்கள் முதலில் சட்டத்தை ஒழுங்காக வழி நடத்துங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அதுபோன்று என்னுடைய படம் ஒன்று காண்பித்தார்கள் கழிவறையில் ஒட்டப்பட்டுள்ளது போன்று அரசு அலுவலகங்களில் முதலமைச்சரின் படம் மாட்டபட்டிருப்பது போன்று மதுபான கடைகளிலும் மாட்டப்படும் என தமிழக பாஜக தலைவர் அறிவித்தார். அதன்படி பெண் அமைப்பைச் சார்ந்தவர்கள் செய்கிறார்கள் கழிவறையில் படங்கள் மாட்டப்படுவதற்கு கவலைப்படவில்லை. கழிவறைக்கு செல்வதால் யாரும் உடலும் கெட்டுப் போவதில்லை. ஆனால் மது கடைகளுக்கு சென்றால் உடல் கெட்டுப் போகும் முதலில் அந்த புத்தி அவர்களுக்கு இருக்கட்டும்.
நீங்களும் உங்களுடைய எதிர்ப்பை தெரிவியுங்கள் இதற்காக அவர்களை கைது செய்வது சரியில்லை போராட்டங்கள் என்பது பல வழிகளில் நடைபெறும் ஸ்டாலின் அண்ணன் போராட்டம் நடத்தாமல் இருந்தாரா எப்படி எல்லாம் போராட்டம் நடத்தினீர்கள் டாஸ்மார்க் முன்பு சென்று கருப்பு படி காண்பீர்கள் போராடுங்கள் அதில் ஒரு நாகரீகம் இருக்கட்டும் என்று தான் கூறுகிறோம்..
சட்டம் ஒழுங்கை பொறுத்த வரையில் கம்பேரிசன் இருக்கே தவிர கண்ட்ரோல் இல்லை
எதற்கெடுத்தாலும் போன ஆட்சியில் இல்லையா இந்த ஆட்சியில் இல்லையா என்ற கேள்வி தான் அனைவரும் பேசுகிறார்கள். உங்கள் ஆட்சி நன்றாக இருக்கும் என்று தான் மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
அப்போ பத்து கொலை நடந்தது இப்பொழுது எட்டு கொலை தான் நடந்திருக்கிறது என்றால் என்ன பதில் கொலை நடக்கக் கூடாது என்பதுதான் அனைவரும் விரும்புவது” என கூறி புறப்பட்டு சென்றார்.

