• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மருத்துவ கழிவுகளை கொட்டிய லாரியுடன் சிறைபிடித்த கிராம மக்கள்..,

ByP.Thangapandi

Apr 14, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நரசிங்கபுரம் கிராமத்தின் அருகாமையில் அமைந்துள்ளது கடுக்காஞ்சி மற்றும் பெத்தான்குளம் கண்மாய்., சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயத்திற்கும், கால்நடை வளர்ப்பிற்கும் உறுதுணையாக இந்த கண்மாய் பயன்படுகிறது.,

இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக இந்த கண்மாய்களில் மர்ம கும்பல் இரவு நேரங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டி தீயிட்டு எரியூட்டப்படுவதாக கூறப்படுகிறது., இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, புகையினால் காற்றும் மாசடைந்து வருவதை கண்ட கிராம மக்கள்.,

இன்று மருத்துவ கழிவுகளை லாரியில் ஏற்றி வந்த மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார், முதலைக்குளத்தைச் சேர்ந்த தமிழரசன் என்ற இருவரை கையும் களவுமாக லாரியுடன் சிறை பிடித்து செக்காணூரணி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.,

செக்காணூரணி காவல் நிலைய போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,