• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கே.டி.ராஜேந்திர பாலாஜி மாட்டுவண்டியில் பயணித்தபடி வாக்கு சேகரிப்பு..,

ByK Kaliraj

Apr 14, 2026

சிவகாசி சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடர்ந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று திருத்தங்கல் பாலாஜி நகர், முத்துமாரி நகர், விஸ்வகர்மா நகர் ஒரு லிட்டர் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய மாட்டு வண்டியில் பயணித்தபடி சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மாட்டு வண்டியை இயக்கியபடி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அவரை பொதுமக்கள் அவரை வியப்புடன் கண்டு வரவேற்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயத்தை பாதுகாக்கும் என்பதை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் மாட்டு வண்டியில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.