• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

ஒரே இரவில் தொடர் வழிப்பறி மர்ம நபர்கள் கைவரிசை..,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கிரி யப்பநாயக்கனூர் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 36)லாரி டிரைவர். இவர் நேற்று தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு ஈரோட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதிகாலை 3:15 மணிக்கு வாடிப்பட்டி அருகே தனிச்சியம் மேம்பாலத்தில் லாரி பழுதானதால் ஓரமாக நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்ம நபர்களில் ஒருவர் ஆனந்தகுமார் வைத்திருந்த ரூ.8000 மதிப்புள்ள செல்போன்,ரொக்க பணம் ரூ.2,500 பறித்துக் கொண்டு திண்டுக்கல் ரோட்டில் தப்பிச் சென்றனர்.

மேலும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கல்லணம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 64). இவர் நேற்று வாடிப்பட்டி சந்தையில் ஆடு வாங்குவதற்காக வேடசந்தூரில் இருந்து மொப்பட்டில் வந்து கொண்டிருந்தார். அதிகாலை 3:45 மணிக்கு வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி மேம்பாலத்தில் வந்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த 20, 25 மதிக்கத்தக்க நான்கு வாலிபர்கள் பழனிச்சாமி வழி மறித்து அவரிடம் ஒருவர் முகவரி கேட்பது போல் பேசி அவர் சட்டை பையில் இருந்த ரூ.1300 பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திவ்யா வழக்கு பதிவு செய்து ஒரே இரவில் அடுத்தடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.