



சாத்தூர் கிழக்கு ஒன்றிய கிராமங்களில் முன்னாள் அமைச்சர் தலைமையில் பூத் ஏஜென்ட்கள் களஆய்வுப் பணி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றிய பகுதிகளில் 2026 தேர்தல் கள பணிகளை தீவிர படுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கர் பூத் ஏஜென்டுகளுக்கான கள ஆய்வுப் பணியை மேற்கொண்டார்.

சாத்தூர் கிழக்கு ஒன்றிய கிராமங்களான சின்ன கொல்லபட்டி, சந்திரப்பட்டி, சடையம்பட்டி, அமீர்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பூத் ஏஜெண்டுகளுக்கான கள ஆய்வுப் பணியை அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கர் நேரில் சென்று மேற்கொண்டார்.


சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி முன்னிலையில், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கர் ஒவ்வொரு கிராமங்களாக நேரில் சென்று பூத் ஏஜெண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள நபர்களை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார்.

வாக்கு வங்கிகளை அதிகரிக்கச் செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வீடுகள் தோறும் பிரச்சாரம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் அதிகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பூத் ஏஜெண்டுகளுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக சாத்தூர் நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


