தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி கொண்ட மநாயக்கன்பட்டியில் உள்ள பி.ஆர். கண்ணன் பிரைமரி மற்றும் நர்சரி பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கண்ணன் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் பொன்மலர் வரவேற்றார். விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அதிமுக அமைப்பு செயலாளரும், கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார். பின்னர் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார் .நிகழ்ச்சியில் டான்பிட் முன்னாள் தலைவர் எல்லப்பட்டி முருகன் ,உத்தமபாளையம் முன்னாள் யூனியன் சேர்மன் தீபாவளி ராஜ், நகர் மன்ற உறுப்பினர் அப்துல் ஆசிர், ஆண்டிபட்டி அதிமுக முன்னாள் பேரூராட்சி செயலாளர் ராமச்சந்திரன், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பொன் முருகன், பேரூராட்சி கவுன்சிலர் பாலமுருகன், மாவட்ட மாணவரணி முருகேசன், கிளைச் செயலாளர்கள் ஆதிஸ்வரன், சண்முகம் உள்பட ஆசிரியைகள் மாணவ ,மாணவிகள் கலந்து கொண்டனர் கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
