• Wed. Feb 19th, 2025

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

ByA.Tamilselvan

Sep 4, 2022

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு சென்னையில் இன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த மாதம் 31-ந்தேதி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சிலைகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் எதிரொலியால், சென்னையில் இன்று பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் ஏற்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை கரைக்க பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர், நீலாங்கரை கடற்கரை ஆகிய 4 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், கடற்கரை ஒட்டியுள்ள சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வாலாஜா சாலை, பாரதி சாலை, பெசன்ட் சாலை, ஆர்.கே.சாலை வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்லும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கச்சேரி சாலை, தெற்கு கெனால் பேங்க் சாலை வழியாக வரும் வாகனங்களும் மாற்றுப் பாபதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடையாறில் இருந்து பாரிமுனை செல்லும் வாகன ஓட்டிகள் மந்தைவெளி, லஸ் கார்னர், ஒய்ட்ஸ் ரோடு வழியாக செல்லலாம்.