• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

பண பட்டுவாடாவை தடுக்க முடியாத தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறை கண்டித்து போராட்டம்..,

ByRadhakrishnan Thangaraj

Apr 21, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள 2026 க்கான சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். இவர் வேட்பு மனு தாக்கல் செய்த நாள் மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஒவ்வொரு கிராமத்திலும் என்னென்ன குறைபாடுகள் உள்ளது என மக்களிடம் கேட்டறிந்து

நான் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் வெற்றி பெற்ற உடனே அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுப்பேன் என கூறி வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதே வேளையில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மக்களுக்கு வாக்களிப்பதற்கு பணம் கொடுப்பதை தடுக்கும் நோக்கத்தில் பணம் கொடுப்பவர்களை பிடித்து தேர்தல் படக்கும்படி அதிகாரிகளிடமும் காவல்துறையிடம் ஒப்படைத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நேற்று முன் தினம் இரவு பட்டியூர் பகுதியில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்து கொண்டிருந்ததை நபர்களை பிடித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார்.

திமுக பிரமுகர்களிடம் இருந்து 99000ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பணம் பட்டுவாடா செய்வதை தொடர்ந்து தடுக்க முடியாத தேர்தல் அதிகாரிகளையும் காவல்துறையும் கண்டித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேர்தல் புறக்கணிப்பு என்று கூறி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் இதனால் இராஜபாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது