மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தெருமுனை பிரச்சார கூட்டம் வேடசந்தூர் அருகே உள்ள புதுரோட்டில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.சவடமுத்து தலைமை ஏற்றுப் பேசினார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.பெரியசாமி, பி.செல்வம், ஏ.ராகேஷ், பி.சக்திவேல், எஸ்.மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் குஜிலியம்பாறை ஒன்றிய முன்னாள் பெருந்தலைவருமான பி.செல்வராஜ், வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பேசினார்கள்.

கூட்டத்தில் திமுக மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் துணை அமைப்பாளர் செல்வம்.தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் எஸ்.கரிமுல்லா, கலை இலக்கிய அணியின் ஒன்றிய அமைப்பாளர் திருநாவுக்கரசு, திமுக முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் நடராஜ், காங்கிரஸ் வட்டார பொது செயலாளர் பிச்சைமுத்து, தேமுதிக தலைமை செயற்குழு உறுப்பினர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிருமான ஆலப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர்கள் டி.ராசு (கரையாம்பட்டி), ஆர்.பழனிசாமி (ஆத்தூர்பிள்ளையூர்), காளியப்பன் (பள்ளிக்கூடத்தான்புதூர்), மாணிக்கம்பிள்ளை (செங்கோட்டைப்பட்டி) உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பேசினார்கள். மூத்த நிர்வாகி முத்துச்சாமி நன்றி கூறினார்.




