• Sun. Mar 16th, 2025

விகடன் இணையதளம் முடக்கம் – காயல் அப்பாஸ் கண்டனம்

ByKalamegam Viswanathan

Feb 17, 2025

விகடன் இணையதளம் முடக்கம் – பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் – ஒன்றிய பாஜக அரசு காயல் அப்பாஸ் கண்டனம்!

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை திருப்பி அனுப்பியதை குறிக்கும் வகையிலும், இதனை கண்டு கொள்ளாத ஒன்றிய பாஜக அரசின் செயலை சுட்டி காட்டும் வகையில் கார்ட்டூன் வெளியிட்டு இருந்த விகடன் இணையதளத்தை முடக்கிய ஒன்றிய பாஜக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.

ஆளும் ஒன்றிய – மாநில அரசுகளின் செயல்பாடுகளை சுட்டி காட்டினாலோ அல்லது உண்மை தன்மையான பத்திரிகை செய்திகளை வெளியிட்டாலோ பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் போடுவது மற்றும் பத்திரிகைகள் அதன் சமூக வளைதளங்களை முடக்குவது போன்ற செயல் பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் செயலாக உள்ளது .

ஆகவே – இந்தியாவின் நான்காவது தூனாக உள்ள பத்திரிகையின் செய்தியாளர்கள் எந்த வித அச்சுறுத்தலும் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட ஆளும் ஒன்றிய- மாநில அரசுகள் பத்திரிகையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும் முடக்கம் செய்த விகடன் இணைய தளத்தை உடனடியாக ஒன்றிய அரசு முடக்கத்தை நீக்கி பத்திரிகையாளர்களை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக, வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.