• Sat. Apr 20th, 2024

பெருநகரங்களிலேயே பெண்களுக்கு எதிரான குறைவான குற்றங்களை கொண்ட தமிழக நகரம்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி.,), நாட்டிலுள்ள, 19 பெருநகரங்களில், பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பாக கடந்தாண்டு (2020) பதிவு செய்யப்பட்ட வழக்கு விபரங்களை வெளியிட்டுள்ளது. இதில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு உட்பட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

குற்றங்கள் குறைவாக பதிவான பெருநகரங்களில், கோவை முதலிடம் பெற்றுள்ளது. அதாவது சராசரியாக ஒரு லட்சம் பெண்களில், 9 பேருக்கு எதிராக குற்றங்கள் பதிவாகியுள்ளதாக, புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. 2ம் இடத்தில் சென்னை உள்ளது.சென்னையில், சராசரியாக ஒரு லட்சம் பெண்களில், 13.4 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில், கேரளா மாநிலத்தின் கொச்சி நகரம் இடம்பெற்றுள்ளது. இதன் வாயிலாக, முதல் மூன்று இடங்களை தென்னிந்தியாவிலுள்ள பெருநகரங்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *