• Sun. Mar 26th, 2023

பள்ளிகளில் தொடர்ந்து பரவும் கொரோனா

கடந்த செ்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆரம்பம் முதலே பள்ளிகளை திறப்பதற்க்கு வரவேற்பும், கண்டனங்களும் இருந்தே வந்தது.

தமிழக அரசுயின் பல்வேறு வழிகாடுதலின் படி, பல்வேறு முன் எச்சரிக்கையுடன் பள்ளிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. இருப்பினும் பல இடங்களில் கொரோனாவால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை அரசு பள்ளி மாணவர்கள் 52 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 104 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் யாரேனும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால்கூட மற்ற மாணவர்களும் பாதிக்கப் படகூடும் என்பதால் இந்த பள்ளி தற்காலிகமாக மூடபபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *