• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்க வலியுறுத்தி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

Byகுமார்

Nov 28, 2022

தமிழக அரசு கடந்த ஐந்தாண்டு காலமாக பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இதுவரை பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்படவில்லை. மேலும் இதனை நம்பி மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் ஐம்பதாயிரம் ஏக்கர் கரும்பு விவசாயம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஏக்கருக்கு 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாகவும் தமிழக அரசு பொங்கல் தொகுப்புக்காக கரும்பு கொள்முதல் செய்யவில்லை என்றால் விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டம் அடைய நேரிடும் எனவும் எனவே தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்த்து அறிவிக்கவும் உடனடியாக கரும்பு கொள்முதல் செய்யவும் வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.