புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர் அருணா விவசாயிகளுக்கு முறையாக பதிலளிக்காத அதிகாரி ஒருவரை கேள்வியால் துளைத்தடித்த ஆட்சியர் அருணா சரியான பதில் அளிக்காததால் அவருக்கு 17பி நோட்டீசை அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய பதிலை கேட்டு பெறுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதால் ஆட்சியில் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்க கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தேர்தல் நேரத்தில் விவசாய கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்ததை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆட்சியர் தமிழ்நாடு முதலமைச்சர் இடம் கோரிக்கை வைக்க வேண்டும் என விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

அதேபோல் அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே அனைத்து விவசாய சங்ககளும் ஒருமித்த கருத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தேர்தல் பரப்புரையின் போது விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் வாங்கிய கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும். அதற்காக இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைக்க வேண்டும் என விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்

அப்பொழுது விவசாயி ஒருவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யாமல் இருந்து வருகிறது என ஆட்சியர் அருணாவிடம் தெரிவித்தார். அப்பொழுது அது குறித்து அதிகாரியிடம் ஆட்சியர் கேள்வி கேட்ட பொழுது முறையாக அந்த அதிகாரி ஆட்சியர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காததாலும் இதுவரைக்கும் எத்தனை டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் அருணா கேட்ட கேள்விக்கு அதிகாரி பதிலளிக்காததாலும் உடனடியாக முறையாக வேலை பார்த்தால் வேலை பாருங்கள் இல்லையென்றால் வேற பகுதிக்கு சென்று விடுங்கள் என்று கோபத்துடன் அதிகாரியை பார்த்து எச்சரித்தவுடன் முறையாக பதிலளிக்காத அதிகாரிகளுக்கு 17பி நோட்டீசை வழங்கி என்ன காரணத்தினால் நெல் கொள்முதல் செய்யவில்லை என காரணத்தை கேட்டு வாங்குங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விவசாயிகள் கூட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை ஆட்சியில் அருணா கண்டித்தது விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




