• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

குச்சனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரத்த தான முகாம்..,

தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரத்த தான முகாம் நடைபெற்றது முகாமில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 65 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் உடல் எடை 45 கிலோவிற்கு மேல் இருக்க வேண்டும் மருத்துவர்கள் ஆலோசனைக்கு பின்னர் இரத்த தானம் செய்ய வேண்டுமென்று நன்கொடையாளர்களுக்கு செவிலியர்கள் எடுத்துரைத்தனர்.

பின்னர் மாவட்ட சுகாதார அலுவலர் வரதராஜன் வட்டார மருத்து அலுவலர் ரத்தினம் குச்சனூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் லாவண்யா நடமாடும் மருத்துவகுழு மருத்துவர் ஜோதிராஜ் கலந்த கொண்டு இரத்த தானம் செய்வதின் பயன்கள் பற்றி எடுத்துரைத்தனர்.

மேலும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சுகாதார செவிலியர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர் மருந்தாளர் பூபதி நன்றியுரையாற்றினார் முகாமில் 40 க்கும் மேற்பட்ட இரத்த நன்கொடையாளர்கள் கலந்து கொண்டனர் குறிப்பிடத்தக்கது