• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByP.Thangapandi

Jun 19, 2026

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்பு, கிராம விவசாய தொழிலாளர்களுக்கு எதிரான விபிஜி ராம்ஜி சட்டத்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்ற சூழலில்

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்பு, கிராம விவசாய தொழிலாளர்களுக்கு எதிரான விபிஜி ராம்ஜி சட்டத்திருத்தம் ஆகியவற்றை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.,

இதில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள சுமார் 100 க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.