பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பின்படி குமராபாளையம் மேற்குகாலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் “வானவில் மன்றம்” என்றபெயரில் எங்கும் அறிவியல்! யாவும் கணிதம்! என்ற பள்ளிகல்வித்துறையின் முழுக்கத்தோடு விழா துவக்கப்பட்டது.
பள்ளிமாணவர்களுக்கு அறிவியலும் கணிதமும் மூலம் செய்முறை பாடம் கற்பித்தலை இன்று தமிழக முதல்வரும் பள்ளிகல்வித்துறையமைச்சரும் திருச்சியில் துவங்கியதை பின்னிட்டு தமிழக முழுவதும் பள்ளிகளில் துவங்கப்பட்டுள்ள இந்த வானவில் மன்றம் மூலம் வரும் நாட்களில் மாணவ மாணவிகளின் அறிவியல்திறன் மேம்படுத்த அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடபட்டுள்ளது.
மேற்குகாலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியை கெளசல்யாமணி அவர்கள் தலைமையில் ஆசிரியர்கள் முன் மாணவ மாணவியர்கள் அறியவில் மற்றும் கணிதத்தில் தங்களுக்கு தெரிந்த செய்முறைகளை மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் முன்னிலையில் செய்துகாட்டி அசத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் வானவில்மன்றம் துவக்கவிழாவில் பெற்றோர்ஆசிரியர் கழகத்தலைவர் கே.ஏ.இரவி ,22 வது வட்ட நகர்மன்ற உறுப்பினர். P.E.புருஷோத்தமன்.
இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடியல் இரா.பிரகாஷ்.
பள்ளி மேலாண்மை குழு தலைவி மேகலா மற்றும் உறுப்பினர்கள் மஞ்சு,மீனா, ஆகியோர் கலந்து கொண்டனர்.