சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் ஆட்டோக்கள் தற்போது 15 கிலோ மீட்டர் வரை அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் எல்லையை விரைவு படுத்தக்கோரி இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஆட்டோ ஒட்டுநர்கள் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இன்று உதகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஒட்டுநர்கள் உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே துவங்கிய பேரணி, காபி ஹவுஸ் சதுக்கம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை ஆட்டோ ஓட்டுநர்கள் மனுவை அளித்தனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ ஓட்டுநர்களால் சுற்றுலா வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.