கொரில்லாகள் மனிதர்களுடன் நெருங்கிப் பழகும் தன்மை கொண்டவை. 30-50 ஆண்டுகள் வரை உயிர் வாழும். இதனுடைய டி.என்.ஏ 95-99% மனிதர்களுடன் ஒத்திருப்பதால் இவை சிம்ப்பன்சிக்கு அடுத்தாற்போல மனிதனுடன் நெருக்கமாக இருக்கக்கூடிய உயிரினம். அப்படிப்பட்ட ஒரு கொரில்லா தற்போது இறந்துள்ளது.
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் விருங்கா என்ற உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு கொரில்லா வகை குரங்குகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு வனத்துறை ஊழியராக பணியாற்றும் மேத்யூ ஷவாமு. இவர் கொரில்லாக்கள் குட்டிகளாக இருக்கும்போதே, அவற்றுடன் விதவிதமாக ‘செல்பி’ எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அப்படி, 2019-ஆம் ஆண்டில் மேத்யூ ஷவாமுடன் செல்பிக்கு போஸ் கொடுத்து பிரபலமடைந்த நடாகாஷி மற்றும் மடாபிஷி என்கிற 2 கொரில்லாகள்.
உலகளவில் டிரெண்டிங்யானது இந்த புகைப்படங்கள்.
அதில் ஒன்றான 14 வயதாகும் நடாகாஷி என்ற பெண் கொரில்லா உடல்நலக் குறைவால், பாதுகாவலரும் பராமரிப்பாளருமான மேத்யூ ஷவாமுவின் மடியிலேயே இறுதி மூச்சைவிட்டுள்ளது. தற்போது வெளிவந்துள்ள அந்த புகைப்படம் மனதை கனக்கச் செய்கிறது.