• Fri. Apr 26th, 2024

அரசு பணத்தை கையாடல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு!..

கன்னியாகுமரி மாவட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நாகர்கோவில் மண்டலம் ராணி தோட்டம் அலுவலகத்தில் உள்ள ஓட்டுநர் பயிற்சி மையத்தில் சாலை அமைக்க மொத்த மதிப்பீட்டுத்தொகை 96.25 லட்சம். பணிக்காலம் 6 மாதங்கள் என தார்சாலை அமைத்த இடத்தில் பணிக்கான விபரம் அடங்கிய பலகை வைக்கப்பட்டு உள்ளது.

அந்த சாலையின் நீளம் அரை கிலோ மீட்டர் மட்டுமே ஆகும் . அதிலும் தரமான தார்ச்சாலை அமைந்தால் அரை கிலோமீட்டருக்கு சுமார் 14 லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும். இந்த தார் சாலை அமைக்க 96.25 லட்சம் என்றால் அரசு விதிகளுக்கு மாறாக அரசு நஷ்டம் ஏற்படும் வகையில் இந்த கையாடல் நடைபெற்று உள்ளது.

ஆகவே இந்த சாலை அமைக்கும் பணியில் அரசு அதிகாரிகள் 72 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்து கையாடல் செய்துள்ளதாக தெரிகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகள் மீது உடனடியாக லஞ்ச ஒழிப்பு துறை மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆதி திராவிட முன்னேற்ற இயக்கம் சார்பாக இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *