சேலத்தில் தீபாவளி பண்டிகைக்கு இனிப்புகள் தயாரிக்கும் பணி தீவிரம். பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்திருந்தாலும் கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் இனிப்புகள் விற்பனை.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சேலத்தில் தீபாவளி பண்டிகைக்காக இனிப்புகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்து உள்ளது.
தீபாவளி பண்டிகை வருகிற 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சேலத்தில் உள்ள துணிக்கடைகள் மற்றும் நகை கடைகளில் இன்று கூட்டம் அலைமோதுகிறது.
இது தவிர தீபாவளி பண்டிகைக்காக சேலத்தில் பல்வேறு இடங்களில் இனிப்புகள் தயாரிக்கும் பணி இரவு பகலாக நடக்கிறது. இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்காக பல்வேறு இனிப்பு வகைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
லட்டு வகைகள் மற்றும் மைசூர் பாக்கு வகைகள், முந்திரியால் செய்யப்பட்ட மைசூர் பாக்கு வகைகள் உள்ளிட்ட பல்வேறு இனிப்புகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு விட இந்த ஆண்டு சர்க்கரை மற்றும் முந்திரி, நெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்திருந்தாலும் இந்த ஆண்டு இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகள் விலை உயராமல் கடந்தாண்டை போலவே விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தவிர உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளபடி கலர் வகைகள் ஏதும் கலக்காமலும் உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ள வழிமுறைகள் படி இனிப்பு வகைகள் தயார் செய்யப்பட்டு விற்கப்படுகிறது என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.