


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை புறநகர் பகுதியான சீனிவாசபுரத்தில் இருந்து அக்களூர் செல்லும் பாதையில், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 70 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் வீடுகளுக்கு செல்லும் பாதையை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வேலி வைத்து அடைத்து விட்டனர். இதன் காரணமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மயிலாடுதுறை திருவாரூர் நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக போக்குவரத்து இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாததால் – இரவு 9 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் இதுவரை தொடர்கிறது. இதனால் , திருவாரூர் To மயிலாடுதுறை சாலை இதுவரை பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நின்று, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


