• Tue. Apr 22nd, 2025

பாஜக நிர்வாகிகள் கருப்பு பேட்ச், கருப்பு சட்டை அணிந்து போராட்டம்..

ByM.JEEVANANTHAM

Mar 17, 2025

பாஜக மாநில தலைவர், உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவதற்கு முன்பே மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை முற்றுகையிடும் போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பாலாஜி மருத்துவமனைக்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடையை, பாரதிய ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பாரதிய ஜனதா கட்சியின் பெண் நிர்வாகிகளுடன் மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் டாஸ்மாக்கை இழுத்து மூட வேண்டும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோஷங்களையும் எழுப்பினர்.

டாஸ்மாக் கடையை சுற்றி மூன்று இடங்களில் தடுப்புகள் வைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை இடித்துக் கொண்டு டாஸ்மாக்கை முற்றுகையிட செல்லும்போது காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மோடி கண்ணன்,எஸ்.டி.எம் செந்தில்.எஸ்.ஆர்.வினோத், ஸ்ரீதர்,கோவி சேதுராமன், முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேஷ், சித்ரா முத்துக்குமார், பாரதி கண்ணன், ராஜகோபால், ஆகியோர் கலந்து கொண்டனர்.