


மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை அடுத்துள்ளது சதுர்வேதமங்கலம் என்னும் புத்தமங்கலம் கிராமம் இங்கு மிக பழையான ஸ்ரீ ஸ்ப்த கன்னியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.இக்கோயில் கும்பாபிசேகத்தையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு புனித நீர் கடங்கள் வைத்து இரண்டு கால யாக பூஜை நடைபெற்றது.

இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்று பூர்ணாகுதி செய்யப்பட்டது.பின்ன்ர் யாகசாலையிலிருந்து மேளதாளம் முழங்க புனித நீர் கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து வேத மந்திரங்களை ஓதி,கோயிலை வலம் வந்து கோபுர விமான கலசத்தை அடைந்து வேத மந்திரங்கள் ஓதி கடங்களில் இருந்த புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிசேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ஓம் சக்தி மகா சக்தி என முழங்கி கும்பாபிசேகத்தை கண்டு அம்பாளின் அருளை பெற்றனர்.


