நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தமிழ் புலிகள் அமைப்பினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குமாரபாளையம் ரங்கனூர் தலித் மக்களை சாதி வெறியோடு ஜேசிபி இயந்திரம் விட்டு கொலை செய்ய முயற்சித்த சுகுமார் என்பவர் மீதும், பள்ளிபாளையம் துப்புரவு பணியாளர் சத்தியாவை கொலை செய்ய முயற்சி செய்த நகராட்சி ஆணையர் ஓட்டுநர் சதீஷ் என்பவர் மீதும் புகார் அளித்தும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. எனவே இருவரையும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை தமிழ் புலிகள் அமைப்பினர் முற்றுகையிட முயன்றனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வந்தவர்களை போலீசார் தடுத்ததால் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரமாக மறியல் போராட்டம் நடைபெற்றது போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதனையடுத்டு போராட்டக்காரர்களிடம் போலீசார் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.