• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Theni

ஆண்டிபட்டி அருகே மறவபட்டியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்  வெகு சிறப்பாக நடைபெற்றது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா மறவபட்டி கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் மற்றும் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதனை முன்னிட்டு விக்னேஸ்வரா பூஜை, ஆராதனம், புண்ணிய வாசனம், கோபூஜை, வேதிகா ஆராதனம், பரிவார தேவதைகள் மற்றும் நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று, மஹா பூர்ணாகுதி நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து நேற்று யாத்ரா தானம் தொடர்ந்து கடங்கல் புறப்பாடாகி, ஒன்பது மணிக்கு மேல் ராஜகோபுரம் மற்றும் மூல கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் விமானங்களில் ஊற்றப்பட்டு, பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது. காமாட்சியம்மனை மெய் உருகி பிரார்த்தனை செய்ய வந்த, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.