• Thu. Apr 24th, 2025

இப்படியும் ஒரு அரசியல் தலைவர் – அதுவும் நம் தமிழகத்தில்

ByA.Tamilselvan

Aug 15, 2022

தகைசால் தமிழர்’ விருது பெற்ற ஆர்.நல்லகண்ணு, அரசு வழங்கிய 10 லட்சம் ரூபாய் நிதியுடன் தனது சொந்த நிதி 5000 ரூபாயையும் சேர்த்து10,05,000 ரூபாயை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
விழாவில் தகைசால் தமிழர் விருது, ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருதுகள், மாநில இளைஞர்கள் விருதுகள் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார்.
தகைசால் தமிழர் விருது பெற்ற ஆர்.நல்லகண்ணு, அரசு வழங்கிய 10 லட்சம் ரூபாய் நிதியுடன் தனது சொந்த நிதி 5000 ரூபாயையும் சேர்த்து10,05,000 ரூபாயை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.இப்படியும் ஒரு அரசியல் தலைவர்கள் நம் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்