• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

75 ஆவது சுதந்திர தினம் -மருதராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை

Byp Kumar

Aug 15, 2022

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கழக அமைப்புச் செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான மருதராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
75 வது சுதந்திர தின விழா நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி யார் ஆணைக்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான மருதராஜ் மத்திய கூட்டுறவு வங்கியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதேபோல் திண்டுக்கல் மாநகராட்சி அதிமுக எதிர்க்கட்சி தலைவர் சி எஸ் ராஜமோகன் கூட்டுறவு சங்கத்தில் உள்ள தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் வெங்கடேசன் உடன் இருந்தார். இதே போல் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன் என்ற பிரேம் நகர கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் உள்ள தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் இவ்விழாவில் அரசு அதிகாரிகள் வங்கிக் குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.