கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கோதையாறு அணை நிரம்பப்பெற்று அதிலிருந்து உபரிநீர் வெளியேற்றபட்டுவருகிறது.

இதனால் காட்டாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதையடுத்து குற்றியாறு, மாங்காமலை உள்ளிட்ட மலையோர கிராமங்களுக்கு செல்லும் தரைமட்ட பாலம் வெள்ளத்தால் மூழ்கடிக்கபட்டது.

இந்நிலையில் மாலையில் பள்ளி முடிந்து வீடு திருப்பி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்ற அரசு பேருந்து ஆற்றை கடக்க முடியாமல் நள்ளிரவு வரை பேருத்திலேயே காத்திருந்தனர். அதையடுத்து சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கோதையாறு அணையின் உபரிநீர் வெளியிடுவதை நிறுத்தபட்டபின் பேருந்து செல்ல வழிவகை செய்யபட்டது. குற்றியாறு தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தமிழக அரசிற்கு நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. இரவு முழுவதும் பெருந்திலே தஞ்சம் அடைந்த மாணவ மாணவியர் மற்றும் பயணிகளுக்கு குடிக்க தண்ணீர், உணவின்றி மிகவும் சிரமம் அடைந்ததாக கூறபடுகிறது.