• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டம்..,

ByRadhakrishnan Thangaraj

May 12, 2025

இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு விசைத்தறி கூட உரிமையாளர்கள் கூலி உயர்வு கோட்டு வேலை நிறுத்தம்!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம், போன்ற பகுதிகளில் 10,000 மேற்பட்ட விசைத்தறிக்கூடங்கள் உள்ளன. இதில் நேரடியாக 20,000 பேரும் மறைமுகமாக 15 ஆயிரம் பேரும் தொழிலாளர்கள் உள்ளனர்.

மே 1ஆம் தேதி அமல்படுத்தப்பட வேண்டிய மூன்று ஆண்டுகால கூலி உயர்வு ஒப்பந்தம் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் விசைத்தறி ஏற்றுமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.. இதன் காரணமாக தொழிலாளர்கள் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் ஏற்றுமதியாளர்கள் மற்றும் விசைத்தறி கூடங்களுக்கு பேண்டேஜ் மருத்துவ துணி கூலிக்கு நெசவு செய்து உற்பத்தி செய்யும் சிறு விசைத்தறி கூட அதிபர்கள் கூலி உயர்வு இன்னும் ஒப்பந்தம் படி நிறைவேற்றப்படாததால், நேற்று இரவு முதல் 700 விசைத்தறிக்கூடங்களை அடைத்து போராட்டத்தை துவங்கி உள்ளனர். இதன் காரணமாக 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ துணி உற்பத்தியும் தேகமடைந்துள்ளது.

இது குறித்து கூலிக்கு நெசவு செய்யும் சிறு விசைத்தறி கூட அதிபர் சங்க தலைவர் பா. குருசாமி தலைமையில் மருத்துவ துணி உற்பத்தியாளர் சங்க தலைவர் செந்தில்ராஜ் மற்றும் ஏற்றுமதியாளர் சங்க தலைவர்கள் முன்னிலையில் விரைவில் அரசு முத்தரப்பு பேச்சு வார்த்தையை நடத்தி சமூக தீர்வு காண வேண்டுமென சிறு விசைத்தறி கூட உரிமையாளர்கள் சங்க சார்பில் குருசாமி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து இந்நிலை நீடித்தால் ஏராளமான துணிகள் தேக்கமடைவதுடன் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால் அரசு உடனடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.