• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

24 மணி நேரமும் கடைகள் செயல்படலாம்

ByA.Tamilselvan

Jun 8, 2022

கொரோனா ஊரடங்கு காலத்தில் முற்றிலும் மூடப்பட்ட கடைகள் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக திறக்கப்பட்டன.பின்பு அவை செயல்படும் நேரம் மாலை 6 மணி வரை இருந்ததை தொற்று குறைந்ததை அடுத்து இரவு முழுவதும் திறக்க அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம் என்ற உத்தரவை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறக்க கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து ஆறு மாதம் மட்டுமே இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு கரோனா தொற்று காரணமாக கடைகள் திறக்கும் நேரம் குறைக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரம் மட்டுமே கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் கடைகளை 24 மணி நேரம் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் 3 ஆண்டுகளுக்கு கடைகள் 24 மணி திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்தக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைந்து உள்ளதால், மேலும் 3 ஆண்டுகளுக்கு இதை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி கடந்த 5-ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 24 மணி நேரம் கடைகளை திறக்க சில நிபந்தனைகளையும் தமிழக அரசு விதித்துள்ளது.
மதுரை போன்று நகரங்களில் கடைகள் 24 மணிநேரமும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.