உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பையாபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற பெயர் பலகை திறக்கப்பட்டது. பின்னர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான எழுதுபொருள் உபகரணங்கள் இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மன்ற மாவட்ட துணைசெயலாளர் சங்கர் செய்திருந்தார்.

இதில் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், மாவட்ட செயலாளர் பேராசிரியர் செல்லத்துரை, துணை செயலாளர் வீரா முத்துசாமி, துணை பொருளாளர் மதன் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் USD சீனிவாசன், வாசுதேவநல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் பொண் முத்தையா பாண்டியன், சிவகிரி நகர செயலாளர் செண்பக விநாயகம், மாவட்ட கவுன்சிலர் கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.