• Sat. Apr 20th, 2024

*விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவில் தேர்தல் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்*

விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் நடைபெற உள்ள 2021 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்புவர்களுக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவில் நேற்று விருப்ப மனு விநியோகம் தொடங்கியது.

விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்சி நிர்வாகிகளுக்கு விருப்ப மனு வழங்கி தொடக்கி வைத்தார்.

2021 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, விருதுநகர் மேற்கு மாவட்ட அண்ணா திமுக சார்பாக விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங்கியது. சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்சி நிர்வாகிகளுக்கு விருப்ப மனு வழங்கி தொடக்கி வைத்தார்.

நகர மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் ரூ.2,500யும், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் ரூ.1,500 கட்டணத் தொகையுடன் மனு பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் விருதுநகர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் நகராட்சிகளுக்கும், மாம்சாபுரம், வத்ராயிருப்பு, வ.புதுப்பட்டி, கொடிக்குளம், சேத்தூர், செட்டியார்பட்டி, சுந்தரபாண்டியம் ஆகிய 7 பேரூராட்சிகளில் போட்டியிடும் வார்டு உறுப்பினர்களுக்கு விருப்ப மனு வழங்கப்பட்டது.

திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் விஜயகுமரன், விருதுநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளரும் பொதுக்குழு உறுப்பினருமான எஸ்.என்.பாபுராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் துரைமுருகேசன், மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் மாப்பிள்ளை விநாயகர் ராமராஜ், விருதுநகர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தர்மலிங்கம், விருதுநகர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கண்ணன், சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, விருதுநகர் நகர கழக செயலாளர் முகம்மது நெய்னார்,


திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், விருதுநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் மச்சராசா, மாவட்ட கவுன்சிலர் வெங்கடேஷ், ராஜபாளையம் நகரக் கழக அவைத் தலைவர் பரமசிவம், மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், வத்ராப் வடக்கு ஒன்றிய கழகசெயலாளர் சுப்புராஜ், வத்திராயிருப்பு பேரூர் கழக செயலாளர் வைகுண்டமூர்த்தி, சுந்தரபாண்டியபுரம் பேரூர் கழக செயலாளர் மாரிமுத்து, சிவகாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் கே.டி.சங்கர், சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *