• Wed. Apr 23rd, 2025

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் கம்பத்தில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை எம்எல்ஏ இராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தேனி மாவட்டம் சார்பில் ” மாநில அளவிலான 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான 4-ஆவது குடியரசு தின விழா.
2024 – 2025 குழு விளையாட்டுப் போட்டிகளாக வாலிபால் போட்டி, தேனி மாவட்டம் கம்பம் அல்-அஜ்ஹர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டியை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன் தொடங்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்து கூறினார். பள்ளி தாளாளர் நைனார் முகமது விளையாட்டு வீரர்களை எம்எல்ஏவிடம் அறிமுகப்படுத்தினார்.

நிகழ்வில் தலைமை ஆசிரியர் மீரான், அரசு விளையாட்டு துறை அதிகாரிகள், கம்பம் தெற்கு நகர திமுக செயலாளர் பால்பாண்டி ராஜா, ஒன்றிய செயலாளர் முருகேசன், லண்டன் நாகூர் மீரான் , நகர்மன்ற உறுப்பினர் கம்பம் சாதிக், அலீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.