• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சிறந்த சமூக சேவைக்கான அப்துல் கலாம் விருது

மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகரும், மேனாள் பாதுகாப்புத் துறை விஞ்ஞானியுமான டாக்டர் வி.பொன்ராஜ் அவர்களின் “அப்துல் கலாம் விஷன் இந்தியா” அமைப்பின் சார்பில், சிறந்த சமூக சேவைக்கான அப்துல் கலாம் விருது – 2025 வழங்கும் நிகழ்ச்சி, தேனி திண்ணை மனித வள மேம்பாட்டு அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. திண்ணை மனித வள மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் இராம மூர்த்தி வரவேற்று பேசினார். செயலாளர் ரெங்கதுரை துவக்கி வைத்து பேசினார். விழாவில் சிறந்த சமூக சேவைக்கான விருதை டாக்டர் பொன்ராஜ், அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் தேனி சுந்தர், திண்ணை செந்தில், அசோகன், தலைமை ஆசிரியர் மோகன்
ஆகியோர்களுக்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார். விருது பெற்றோர் அனைவரும் ஏற்புரை வழங்கினர். அப்துல் கலாம் விஷன் இந்தியா அமைப்பின் தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.