

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று 4 ஆண்டு நிறைவடைந்து 5 வது ஆண்டு துவங்குகிறது.
திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன.அவரது தந்தை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 1969 முதல் 2018 வரை 49 ஆண்டுகாலம் திமுகவின் தலைவராக நீடித்தார். இறுதி காலத்தில் அவரது உடல்நிலை குன்றியதால் 2017ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். கருணாநிதியின் மறைவுக்கு பிறகு கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட்28ம் தேதி திமுகவின் 2 வது தலைவரானார் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்றோடு திமுக .தலைவராகி 4 ஆண்டுகள் முடிந்து 5வது ஆண்டு துவங்குகிறது.5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்- கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

