“கட்சி நலன் கருதி சசிகலா -டிடிவி தினகரனை விரைவில் சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் எதிரும், புதிருமாக செயல்பட்டு வருகிறார்கள் , சசிகலாவுக்கு எதிராக ஒரு கட்டத்தில் தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் இப்போது சசிகலாவுக்கு ஆதரவு கரம் நீட்டி இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி தலைமை இல்லாத அ.தி.மு.க.வை உருவாக்குவது தான் ஓ.பன்னீர்செல்வத்தின் திட்டம். அதற்காகத்தான் மாவட்டங்களில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களும் இணைந்து செயல்படும்படி ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்து இருந்தார். சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், “கட்சி நலன் கருதி, சசிகலா, டி.டி.வி.தினகரன் இருவரையும் விரைவில் சந்திப்பேன்” என்றார்.