• Fri. Apr 19th, 2024

ஸ்டாலின் மக்களை பற்றி கவலைபடுவதில்லை கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

ஸ்டாலின் மக்களை பற்றி கவலைபடுவதில்லை என்றம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்றும் சிவகாசியில் மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து அதிமுக சார்பில் கட்சி அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, மின்கட்டண உயர்வை கண்டித்து, விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக சிவகாசி பாவாடி தோப்பு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில 1000ற்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,


மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே. அண்ணா திமுக என்றைக்கும் விருட்சகரமாக வளர கூடிய இயக்கம். ஆலை அதிபர்களையோ, மிகப்பெரிய கோடீஸ்வரர்களையோ, தொழில் அதிபர்களையோ நம்பி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை. பட்டாசு தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளி இப்படி கூலித் தொழிலாளர்களை நம்பிதான் இந்த இயக்கத்தை புரட்சித்தலைவர் ஆரம்பித்தார்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு இந்த இயக்கத்தை புரட்சித்தலைவி அம்மா கட்டுக்கோப்பாக இராணுவ பலத்தோடு வளர்த்தார். புரட்சித்தலைவி அம்மா ஆட்சி காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கான எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார்.

அம்மாவுடைய காலத்துக்கு பிறகு தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் எடப்பாடியார் . கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில்
சொத்து வரி உயர்வு கிடையாது, மின் கட்டண உயர்வு கிடையாது, பஸ் கட்டணம் உயர்வு கிடையாது, விலைவாசி உயர்வு கிடையாது ஏழைகளை பாதிக்கின்ற எந்த செயலையும் அம்மாவுடைய அரசு செயல்படுத்தவில்லை. தமிழக எதிர்கட்சி தலைவரும், கழக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இட்ட கட்டளையை ஏற்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.


மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்தும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தையும் திருமண உதவித்தொகை திட்டத்தையும் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. இன்றைக்கு ஆளுகின்ற திமுக அரசு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களைப் பற்றி கவலைப்படாமல் விலைவாசி உயர்வு பற்றி கவலைப்படாமல் விளையாட்டு மோகத்தில் இருக்கின்றார். விளையாட்டுப் போட்டிகளுக்கு போஸ் கொடுத்து கண்டு களிக்கின்றார்.
சிவகாசி மாநகராட்சியில் கூலித்தொழிலாளர்கள், பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் அதிகம் வாழ்கின்றனர். இன்றைக்கு திடீரென்று மின்கட்டணம், சொத்து வரியை நீங்கள் உயர்த்தினால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மின்கட்டணம் உயர்வு, சொத்து வரியை உயர்வை உடனடியாக திமுக அரசு திரும்பப் பெற வேண்டும். சிவகாசியில் தற்போது பட்டாசு, தீப்பெட்டி தொழில் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றது. இதில் மின்கட்டணம் உயர்வு, சொத்து வரியை நீங்கள் கூட்டினால் பெரிய பாதிப்பை சிவகாசி மக்கள் சந்திப்பார்கள். மூலப்பொருட்களின் விலை உயர்வால் தீப்பெட்டித் தொழில் முற்றிலும் முடங்கி போய் உள்ளது. பட்டாசு விதிக்கப்பட்ட 25 சதவீத ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக கடந்த அதிமுக ஆட்சியில்தான் எனது முயற்சியால் தான் குறைக்கப்பட்டது. தீப்பெட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைத்ததும் கடந்த அதிமுக ஆட்சியில்தான் எனது முயற்சியில் தான் நடைபெற்றது. அதனால்தான் இன்றைக்கும் தீப்பெட்டி, பட்டாசு தொழில் கொஞ்சமாவது உயிரோடு இருக்கின்றது. இன்று பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டு இருக்கின்ற நெருக்கடியான சூழ்நிலையை யாருமே கண்டு கொள்ளவில்லை. பட்டாசு, தீப்பெட்டி, விவசாய தொழிலையோ யாருமே கண்டு கொள்ளவே இல்லை. பட்டாசு தொழிலாளர்கள் வேலை இன்றி வீதியில் நிற்கின்றனர். பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் பாதிப்பு பற்றி டெல்லியில் போய் பேசுவதற்கு இங்குள்ள அமைச்சர்களுக்கு திராணி கிடையாது. இருப்பதை சுருட்டிக் கொண்டு ஓடி விடுவோம் என்று நினைப்பில் தான் ஆட்சி நடத்துகின்றனர். எந்தவிதமான நல்லவிதமான மக்கள் திட்டங்களை செய்வது கிடையாது. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சிறுமைப்படுத்தி மத்திய அரசை கேவலப்படுத்துகின்ற வேலையில்தான் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசிடம் பேசி ஏராளமான நிதிகளை பெற்று தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவதற்கு திமுகவில் ஆள் இல்லை. இப்போது இருக்கின்ற நிலைமை மாறவேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் வேண்டும். அதற்கு அடித்தளமாக விளங்கக் கூடியவர்கள் தமிழக மக்கள். திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை சொல்லக்கூடிய விதமாகத்தான் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். நின்றால் வரி, உட்கார்ந்தால் வரி, நடந்தால் வரி என எதற்கெடுத்தாலும் வரி விதித்தால் எப்படித்தான் சாப்பிடுவது. ஆளுகின்ற திமுக அரசு மக்கள் நலனில் கருத்தில் கொண்டு மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். பட்டாசு, தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் விலை, ஆவின் விலை உயர்வு என எதையும் திமுக கூட்டணி கட்சி கேட்க தயாராக இல்லை. இதை எதிர்த்து கேட்கும் கட்சியாக அதிமுக மட்டுமே உள்ளது..இத்தகைய நிலை மாற வேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன். ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ். சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்..ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, மாவட்ட ஊராட்சித் தலைவர் வசந்த்திமான்ராஜ், துணைத்தலைவர் சுபாஷினி, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர செயலாளருமான இன்பத்தமிழன், விருதுநகர் மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், மாவட்ட கழக துணை செயலாளர் ராஜபாளையம் அழகுராணி, மாவட்ட பொருளாளர் தேன்ராஜன், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் கே.கே.பாண்டியன் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் முத்துபாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் மாரீஸ்குமார், விருதுநகர் மேற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்தையா, மாவட்ட மீனவர் அணி செயலாளர் காசிராஜன், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் விஜய் ஆனந்த், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜ.ஓ காலனி மாரிமுத்து, நாளைய பாரதம் அறக்கட்டளை நிறுவனர் பாலபாலாஜி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் சேதுராமன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முத்துராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன், கலை பிரிவு மாவட்டச் செயலாளர் மூக்கையா, அம்மா பேரவை பிலிப்வாசு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் திருமுருகன், அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர் சங்கரலிங்கம் துணைச் செயலாளர் குருசாமி, சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், கருப்பசாமிபாண்டியன் ஷாம் (எ)ராஜஅபினேஸ்வரன், விருதுநகர் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், மச்சராசா, சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஆரோக்கியம், வெங்கடேஷ், கருப்பசாமி, விருதுநகர் நகர கழக செயலாளர் நயினார் முகம்மது, சிவகாசி முன்னாள் நகரக் கழகச் செயலாளர் அசன்பதுருதீன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் மயில்சாமி, வத்ராப் ஒன்றிய கழகச் செயலாளர்கள் சுப்புராஜ், சேதுவர்மன், ராஜபாளையம் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம், சேத்தூர் நகரக் கழகச் செயலாளர் பொன்ராஜ்பாண்டியன், ராஜபாளையம் நகர கழக செயலாளர் பரமசிவம், வக்கீல் துரை முருகேசன், சிவகாசி மாமன்ற உறுப்பினர்கள் கரைமுருகன், சாந்திசரவணகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகத்சிபிரபு, ஆழ்வார் ராமானுஜம், சுடர்வள்ளி, முன்னாள் கவுன்சிலர் கணேஷ்குரு, மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன், திருத்தங்கல் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் கோவில்பிள்ளை, திருத்தங்கல் அம்மா பேரவை செயலாளர் ரமணா, மாவட்ட கவுன்சிலர் நர்மதாஜெயக்குமார், செட்டியார்பட்டி பேரூர் கழக செயலாளர் அங்குதுரைபாண்டியன், சுந்தரபாண்டியம் பேரூர் கழக செயலாளர் மாரிமுத்து, கொடிக்குளம் பேரூர் கழக செயலாளர் சங்கரமூர்த்தி, வத்திராயிருப்பு பேரூர் கழக செயலாளர் வைகுண்டமூர்த்தி, வ.புதுப்பட்டி பேரூர் கழக செயலாளர் ஜெயகிரி, சேத்தூர் பேரூராட்சி, எஸ்.கொடிக்குளம் பேருராட்சி, வத்திராயிருப்பு பேரூராட்சி, சுந்தரபாண்டியன் பேரூராட்சி, செட்டியார்பட்டி பேரூராட்சி, வ.புதுப்பட்டி பேரூராட்சி, மம்சாபுரம் நிர்வாகிகள் மம்சாபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, அருணாநாகசுப்பிரமணியன், தமிழரசி கணகராஜ், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராமராஜ்பாண்டியன், எதிர்க்கோட்டை ஆர்.ஆர்.மணிகண்டன், சாத்தூர் முன்னாள் நகர கழக செயலாளர் வாசன், சிவகாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் கே.டி.சங்கர், சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கழக ஒன்றிய கழக நகர கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *