• Tue. Sep 10th, 2024

சிலை வைக்க பணம் இருக்கு .. மக்களுக்கு செய்ய பணமில்லையோ.. ஜெயக்குமார் அதிரடி..

Byகாயத்ரி

Jul 25, 2022

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் திமுக ஆட்சியில் சொத்து வரி மற்றும் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. அதனால் திமுக அரசை கண்டித்து சென்னையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும். இது தொடர்பாக கட்சியில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. ஊர் தோறும் சிலை வைப்பதற்கு, நினைவுச்சின்னம் அமைக்க பணம் இருக்கிறது. ஆனால் மக்கள் நலத்திட்டங்களுக்கு பணம் இல்லை என்கிறது திமுக அரசு.விளம்பரம் மற்றும் கருணாநிதி புகழுக்காக மட்டுமே கோடி கோடியாக செலவு செய்கிறது என்று கூறியுள்ளார் .மேலும் ஓபிஎஸ் அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,”ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது போல பன்னீர்செல்வம் ஆட்களை நியமிக்கிறார்”என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *