• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மதுரையில் ஸ்ரீமத் வெங்கட்ரமண பாகவத 242 வது ஜெயந்தி இசை விழா

Byp Kumar

Dec 23, 2022

மதுரை சௌராஷ்ட்ரா சபை ரங்க மகாலில் ஸ்ரீமத் வெங்கட்ரமண பாகவத 242 வது ஜெயந்தி இசை விழாவும் விருது வழங்கும் நடைபெற்றது
மதுரை வாலாஜாபேட்டை ஸ்ரீமத் வெங்கட் ரமண பாகவத சேவாசமயம் சார்பாக ஸ்ரீ வெங்கட்ரமண பாகவதர் அவர்களின் 242 வது ஜெயந்தி இசை விழா மதுரை சௌராஷ்டிரா ரெங்க மகாலில் விமர்சையாக நடைபெற்றது. இந்தவிழாவிற்கு சமாஜம் தலைவர் ஜீவன்லால் தலைமை தாங்கினார் .செயலாளர் ரவீந்திரநாத் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக தொல்லியல் கண்காணிப்பாளர் கோயில் ஆய்வு திட்டம் தென்மண்டலம் இந்திய தொல்லியல் ஆய்வு துறையை சேர்ந்த அமர்நாத்ராமகிருஷ்ணா கலந்து கொண்டார்.

நன்றி தமிழன் தொலைக்காட்சி

அவர் வெங்கட்ரமண பாகவதர் விருதை சென்னை அரசு இசைக் கல்லூரி முதல்வர் சாய்ராமுக்கும், ராமநாதபுரம் நாகராஜ பாகவதர் விருதை மதுரை புல்லாங்குழல் வித்துவான் கல்யாணகுமாருக்கும், வித்வான் டி கே ராமரத்தினம் விருதை வீணை கலைஞர் ஸ்ரீ லட்சுமிபன்சிதருக்கும் வழங்கினார். மற்றும் ஸ்ரீ விஜயராகவ அய்யங்கார் ,மருத்துவர் ரவீந்திரநாத்பாபு மற்றும் சரோஜினி ஜெகதீசனுக்கு சாதனையாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த விழாவில் சமாஜம் பொருளாளர் வித்யாபூர்ணாச்சாரி நன்றியுரை வழங்கினார். இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் வித்துவான்களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்க்கான ஏற்பாட்டினை லட்சுமணன்ராஜ் மற்றும் ஜெயபிரகாஷ் செய்திருந்தனர்.