• Wed. Mar 29th, 2023

ஆசியாவிலேயே ராஜ கோபுரத்துடன் இருக்கும் ஸ்ரீ உச்சிஷ்ட விநாயகர் திருக்கோயில்

ByAlaguraja Palanichamy

Jul 4, 2022

இந்தியாவில், தமிழ்நாட்டின் தென்பகுதியில் கடை கோடியாக அமைந்துள்ள மாவட்டம் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.மணிமூர்த்தீஸ்வரம். இங்கு விநாயக பெருமானுக்கு தனி ஆலயம் அமைந்துள்ளது.தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்து உள்ள இந்த கோவிலின் மூலவரான விநாயகப் பெருமாள் , நீல சரஸ்வதியை தன் மடியில் அமர்த்தி வைத்தப்படி காட்சி. தருகிறார். தன்னுடைய 32 தோற்றங்களில் 8-வது வடிவமாக போற்றப்படும் உச்சிஷ்ட கணபதியாக இத்தலத்தில் விநாயகப் பெருமாள் அருள் பாலித்து வருகிறார். 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவில் ஆசியாவிலேயே வீற்றிருக்கும் ஒரு சில ஆலயங்களில் ஒன்றாகும்.8 நிலை மண்டங்கள் 3 பிரகார ங்கள், கொடி மரத்துடன் கூடிய அமைந்திருந்திக்கிறது இந்த ஆலயம். இந்தக் கோவிலில் சிவலிங்கம் , காந்திமதி அம்மன் 16 சோடஷ கணபதிகள் கன்னி மூல கணபதி , வள்ளி -தெய்வானை சமேத சுப்பிரமணியன் , சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன. இந்த ஆலயத்திற்கு ரிஷி தீர்த்தம், ருத்ரபாத தீர்த்தம் என்ற இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. வன்னி மரம் பனை மரம் ஆகிய இரண்டும் தல விருட்சங்களாக உள்ளன.
கோவில் தல புராணம் , முன்னொரு காலத்தில் .வித்யாகரன் என்ற அரக்கன் பிரம்மாவை நினைத்து கடுந்தவம் புரிந்தான். பிரம்மாவும், வித்யாகரனுக்கு காட்சி அளித்து வரம் தருவதாக கூறினார். அப்போது வித்யாகரன், என்னைப் போரில் வெல்லக்கூடியவன் மனிதனாகவோ, மிருகமாகவோ இருக்கக் கூடாது. அகோரமானவனாகவும் இருக்கக் கூடாது. தேவ அசுர சபைகளின் முன்பு யாருடைய உதவுயும் இல்லாமல் என்னுடன் போரிட வேண்டும் .என தன்னை யாரும் அழிக்க முடியாத ஒரு அரிய வரத்தை கேட்டான். பிரம்மாவும் வித்யாகரன் கேட்ட வரத்தை வழங்கினார். வரம் பெற்ற வித்யாகரன், தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற அகங்காரத்துடன் , தேவர்கள், முனிவர்கள் அனைவரையும் அடிமைப்படுத்தி, அவர்களுக்கு பல்வேறு துன்பங்களைக் கொடுத்தான். இதனால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று கூடி மும்மூர்த்திகளிடம் சரண் அடைந்தனர்.

விநாயக கடவுளின் மடியில் நீலவேணி அம்பாள் அமர்ந்திருப்பது போன்று மூலவர் காட்சி தருகிறார். பழமையான திருக்கோயில்களில் கட்டிடக்கலை எடுத்துக்காட்டாக ஆண்டுதோறும் சித்திரை முதல் மூன்று நாட்கள் கோயில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வு நடைபெற்றது.அதன்படி பல வருடத் துவக்கமான சித்திரை முதல் நாளான இன்று சூரிய ஒளி மூலவர் மீது விழும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டுச் சிறப்பு ஹோமமும் சிறப்புப் பூசைகளும் நடைபெறும்.
தொடர்ந்து மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சூரிய உதயம் தொடங்கிய சிறிது நேரத்தில் சூரிய ஒளி மூலவர் மீது விழுத் தொடங்கியவுடன். அதன்பின் சாமிக்கு மகா தீபாரதனை நடைபெறும்.
தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் தாமிரபரணி நதிக்கரையில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் விநாயகருக்கு ஆசியாவிலேயே தனி சன்னதி கொண்டு அமைந்திருக்கக் கூடிய கோயிலாக திகழ்கிறது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்ட உள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சிஷ்ட விநாயகர் திருக்கோயில் மணி முர்த்தீஸ்வரம் வைணவ பிரபந்த பாடசாலையில் தங்கி பயிலும் மாணவர்களுடன் எடுத்த புகைப்படம்.

மும்முர்த்திகள் ஒன்று சேர்ந்துள் பராசக்தி மாதாவான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை மனதில் நினைத்து. மிகப் பெரிய யாகத்தினை நடத்தினர். மேலும் வித்யாகரனை அழிக்க விநாயகரை வேண்டினர். விநாயகரும் ஒப்புக் கொண்டு யகத்தின் முடிவில் யாகத்தீயில் இருந்து அஷ்டமி திதியில் வெளிப்பட்டார். அதே போல் பிரம்மாவின் ஏற்பட்டால் பதங்க முனிவர் வேள்வி நடத்த அதில் இருந்து பிரம்மாவின் மகளாக நீல சரஸ்வதி வெளிப்பட்டாள் . விநாயகருக்கு நீல சரஸ்வதியை நவமி திதியில் திருமணம் செய்து வைத்தனர்.

மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி எழுந்தருளி ஆசி வழங்குகிறார்.பெரிய திருமேனியும் சதுர் புஜங்களும் கொண்டு , இடது தொடையில் வல்லபையை அமர்த்தியபடி கம்பீரமாக தரிசனம் தருகிறார். சித்திரை மாச முதல் 12 நாட்களுக்கு சூரிய பூஜை செய்கின்றன. மந்திர மாகரண விதிப்படி யோக தத்துவ விளக்கமாக அமர்ந்த நிலை. விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி தோற்றம் அகஸ்தியரின் சீடரான ஹேரம்ப மகரிஷி நிறுவி வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது. மூஞ்சூறு வாகனம் அழகாக இருக்கின்றது நெல்லையப்பரும் தரிசனம் தருகின்றார். நெல்லையப்பரும் தரிசனம் தருகின்றார்.

குழந்தை பாக்யம் வேண் படுவர்கள் மாங்கல்யம் பாக்கியம் இவரை வழிபட்டு நற்பயன் அடைகின்றனர். நெல்லையப்பர் கோவிலில் வழிபாடு நடக்கும் போது ப்ரம்மாண்ட மணி ஒலிக்கும். அதை தொடர்ந்து இங்கும் மணி ஒசை கேட்கும். இதனால் மூர்த்தீஸ்வரம் என்ற பெயரிலிருந்து. இவ்வூர் மணி மூர்த்தீஸ்வரம் என்றானது. பூக்கள் .நிறம்பிய ஏழு கலசங்கள் தாமிரபரணியில் மிதந்து வந்து, சிந்து பூந்துறை அருகே வரும்
போது, குப்புற கவிழ்ந்து பூக்கள் சிதறினவாம். அப்போது மணி தானாக வே ஒலிக்க ஆரம்பித்ததாம்.

விநாயகர் தன் .தேவியுடன் இருந்து அருள்பாலிப்பதால் கணவன் – மனைவி ஒற்றுமை, சந்தோஷம், திருமணத்தடை நீக்குதல், பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்தல் ஆகிய வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறுகிறது என்பது இக்கோவிலின் சிறப்பாகும்.
16 விநாயகர்கள் தேவியை மடியில் அமர்த்தி, தன் துதிக்கையை தேவியின் மீது வைத்திருக்கின்ற கோலம். பல கோவில்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். அதனால் அந்த உருவம் மூலவராக இருக்கின்ற இடம் இந்த ஆலயம் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி,
நிலத்தடி நீர் மற்றும் காலநிலை ஆய்வாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *