• Wed. Apr 24th, 2024

இலங்கையில் 300 கிலோ எடை கொண்ட ‘ஆசியாவின் ராணி’..!

Byவிஷா

Dec 14, 2021

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து 85கி.மீ தொலைவில் உள்ள ரத்தன்புரா நகரத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து 300கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட ‘ஆசியாவின் ராணி’ என்று அழைக்கப்படும் அரியவகை ரத்தினக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ள தகவலை இலங்கை வெளியிட்டுள்ளது.


உலகின் மிகப்பெரிய இயற்கையான நீல சபையர் சுமார் 310 கிலோ எடையுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13) வெளியிடப்பட்டது. இந்த ரத்தினக் கல்லுக்கு “ஆசியாவின் ராணி” என்று பெயரிடப்படப்பட்டுள்ளது. இலங்கை அரசின், தேசிய ரத்தினம் மற்றும் ஆபரண ஆணையம் இந்த நீல சபையர் கல், மிகவும் மதிப்புமிக்க ரத்தினக் கல் என்று சான்றளித்துள்ளது.

இந்த மதிப்புமிக்க ரத்தினக்கல், சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச ரத்தின நிறுவனங்கள் இன்னும் இந்த விலையுயர்ந்த ரத்தினக் கல்லுக்கு சான்றளிக்கவில்லை.
எனவே, இந்த ரத்தினக்கல் தொடர்பாக மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார். சுரங்கத்திற்கும் மேலும் பல சுத்தமான ரத்தினக் கற்கள் இருக்கக்கூடும்.

எனவே சுரங்கத்திலும் மேலும் தேடும் பணி தீவிரப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அலுமினியம் ஆக்சைடு, டைட்டானியம், இரும்பு, நிக்கல் உள்ளிட்டவை ரத்தினக் கல்லில் உள்ளதே இதன் சிறப்பு என ரத்தின நிபுணர் சமிலா சுரங்கா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *