• Sat. Apr 20th, 2024

அண்டார்டிகாவில் த்வைட்ஸ் பனிப்பாறை விரிசல்.., உலகிற்கே பெரும் அச்சுறுத்தலா..?

Byவிஷா

Dec 14, 2021

அண்டார்டிகாவின் த்வைட்ஸ் பனிப்பாறையில் ஆபத்தான வகையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக உலகம் பெரும் அச்சுறுத்தலை சந்திக்கும் என்று செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கின்றன.


அண்டார்டிகாவின் த்வைட்ஸ் பனிப்பாறையில் ஆபத்தான வகையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன, இதன் காரணமாக உலகளாவிய கடல் மட்டம் திடீரென குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பல பகுதிகள் நீரில் மூழ்கி மக்கள் இடம்பெயர நேரிடலாம்.


கடல்களின் வெப்பமயமாதலின் விளைவாக த்வைட்ஸ் ஈஸ்டர்ன் ஐஸ் ஷெல்ஃப் பனிப்பாறைகளை இணைப்பதற்கான புள்ளியாக செயல்படுகிறது. இந்நிலையில் செயற்கைக்கோள் படங்கள் TIES பகுதியில் பெரிய விரிசல்களை ஏற்பட்டுள்ளது. இந்த மிதக்கும் பனிக்கட்டி உடைந்தால் கடல் மட்டம் 25சதவீதம் உயரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.


பனிப்பாறை நிபுணர் பேராசிரியர் டெட் ஸ்கம்போஸ், பனிப்பாறையின் நிலையில் வியத்தகு மாற்றங்கள் நிகழப் போகின்றன என்றும் த்வைட்ஸ் பனிப்பாறை மிக வேகமாக உருகி வருகிறது, இப்போது அதன் பெரும்பகுதி உடைந்து போகும் அபாயத்தில் உள்ளது எனவும் கூறினார். பனிப்பாறையில் விரிசல் அதிகரித்து உடைந்தால், அது த்வைட்ஸ் பனிப்பாறையின் கிழக்கு பகுதியில் மூன்றில் ஒரு பகுதியை இன்னும் வேகமாக உருகச் செய்யும். இந்த நிகழ்வின் காரணமாக, பனிப்பாறை உருகும் வேகம் மும்மடங்கு அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *