



நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வசம்பள்ளம் வள்ளுவர் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்த திமுக மாவட்ட பொறுப்பாளர் கே எம் ராஜு சாமி தரிசனம் செய்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது வசம்பள்ளம் வள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மிகவும் பிரசத்தி பெற்ற கருமாரியம்மன் கோயில் உள்ளது. இன்று கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவை முன்னிட்டு சிறப்பு ஓம குண்டம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள திமுக மாவட்ட பொறுப்பாளர் கே எம் ராஜு மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கிராம மக்கள் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர் கே எம் ராஜு கருமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். விழாவில் உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


