• Mon. Mar 17th, 2025

ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் உயிரினங்கள் பாதுகாப்புக் குழுக்கூட்டம்

ByT.Vasanthkumar

Feb 14, 2025

தன்னார்வ அமைப்புகள் மூலம் 10,10,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதில் 6.80லட்சம் மரக்கன்றுகள் எங்கெங்கு இந்த மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம், பசுமைக்குழு, மேலாண்மைக்குழு மற்றும் உயிரினங்கள் பாதுகாப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ்பசேரா முன்னிலையில் இன்று (14.02.2024) பெரம்பலூர் வனத்துறையின் சார்பில் மாவட்ட காலநிலை மாற்றம் (District Level Climate Change Committee) குழுக்கூட்டம், மாவட்ட அளவிலான பசுமைக் குழுக் (District Level Green Committee) கூட்டம். மாவட்ட ஈரநில மேலாண்மைக் குழுக் (District Level Wetland Committee) கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான உயிரினங்கள் பாதுகாப்புக் குழுக்கூட்டம் (District Level Wildlife Committee) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முக்கிய கருப்பொருள்களாக ஈரநிலங்கள் மேலாண்மை, மரங்கள் வெட்டுவது குறித்து பசுமை குழுவின் நெறிமுறைகளைப் பின்பற்றுதல், வன உயிரினங்கள் மேலாண்மை உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
பெரம்பலூர் வனக்கோட்டத்தின் மூலம் 02 பிப்ரவரி 2025-ல் ஈரநிலங்கள் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட அளவில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டது, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, ரொக்கப் பரிசு, பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் வழங்கினர்.

பசுமைப் பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட வாலிகண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, காரை அரசு மேல்நிலைப்பள்ளி, து.களத்தூர் அரசு உயர் நிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.20.00 லட்சம் வீதம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளின் படி இந்த தொகை செலவு செய்யப்பட வேண்டும் என்றும், மாணவ, மாணவிகளிடையே மரம் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

பின்னர் இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததவாது..,
பெரம்பலூர் மாவட்டத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்க எண்ணற்ற மரக்கன்றுகளை நடுவதற்கு அனைத்துத் துறைகளின் சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 2023-2024 ஆம் ஆண்டில் வனத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, பள்ளிக் கல்வித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தன்னார்வ அமைப்புகள் மூலம் 10,10,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதில் 6.80லட்சம் மரக்கன்றுகள் எங்கெங்கு இந்த மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என்ற விபரங்களை சம்மந்தப்பட்ட துறையினர் ஜியோ டேக் மூலம் படம் எடுத்து அரசுக்கான இணையதளத்தில் பதிவேற்றியுள்ளனர். மீதமுள்ள 3.30 லட்சம் மரக்கன்றுகளை ஜியோ டேக் மூலம் பதிவேற்றம் பணிகளையும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் 28.02.2025க்குள் முடிக்க வேண்டும்.
அதேபோல 2024-2025 ஆம் ஆண்டிற்கு நமது மாவட்டத்திற்கு பல்வேறு துறைகளின் மூலம் 12,84,275 மரக்கன்றுகளை நடுவதற்கு இலக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 9,17,958 மரக்கன்றுகள் நடப்பட்டு ஜியோ டேக் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 3,67,817 மரக்கன்றுகளையும் விரைந்து நட்டு ஜியோ டேக் செய்திட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் குகனேஷ், குழு உறுப்பினர்கள், வனச்சரக அலுவலர்கள், களப்பணியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.