

காவலர்களுக்கு மாவட்ட எஸ்.பி. அரசுப் பேருந்து அடையாள அட்டையை வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா இன்று மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர் வரை அரசுப் பேருந்தில் இலவசமாக பயணிக்கும் வகையில் அரசுப் பேருந்து அடையாள அட்டையை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு காவல்துறையினருக்கு அவர்கள் பணிபுரியும் அந்தந்த மாவட்டங்களில் இலவசமாக அரசு (ஏசி மற்றும் விரைவு பேருந்து தவிர) பேருந்தில் பயணிக்கும் வகையில் அரசு பேருந்து பயண அடையாள அட்டையை வழங்கி நடைமுறைபடுத்தி வரும் நிலையில் இன்று 13.02.2025 -ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு அரசு பேருந்து பயண அடையாள அட்டையை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் T.மதியழகன் (தலைமையிடம்) கலந்துகொண்டு அடையாள அட்டையை வழங்கினார்.

