• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் டிஎஸ்பி நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு..,

ராமநாதபுரம் மாவட்டம் போலீஸ் துணை சூப்பிரண்ட் திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு சிஐடி போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வரும் ராமகிருஷ்ணன் (வயது 56) இவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை மற்றும் கள்ளிமந்தயம் ஆகிய போலீஸ் சரகங்களில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டார்.

ராமகிருஷ்ணன் இன்று மாலை இடையக்கோட்டை பகுதியில் போலீஸ் ஜீப்பில் வாக்குச்சாவடி பகுதிகளில் ரோந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணனுக்கு லேசான நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டது.

இதனை அடுத்து அவரை இடையக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் ராமகிருஷ்ணனுக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மயக்கி விழுந்தார்.

உடனடியாக அவரை போலீஸ் ஜீப்பில் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் இறந்தார். இதனையடுத்து அவரது உடல் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது

இடையக்கோட்டை அருகே தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் இன்னும் 3 வருடத்தில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.