

மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறையில் மாயூரநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயம் மயிலாடுதுறை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும் இங்குள்ள சிவனுக்கு பொதுமக்கள் விளக்கேற்றி அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது .


இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வரிசையாக சென்று சிவனை தரிசனம் செய்தார்கள். இரவு முழுவதும் பக்தர்கள் விழித்திருந்து சிவனை வணங்கி தங்களின் வேண்டுதல்களை இறைவனிடம் சமர்ப்பிப்பது வழக்கம் அதற்காக கடந்த 23ஆம் தேதி ஆரம்பித்த மயூரா நாட்டிய அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அதன் ஒரு பகுதியாக இன்று இத்தாலியில் இருந்து வந்த நடன கலைஞர்கள் நாட்டியமடி பொது மக்களின் பாராட்டுதலை பெற்றனர் இரவு முழுவதும் கண் விழித்த பக்தர்கள் இந்த நாட்டியத்தை ரசித்தவாறு குடும்பத்துடன் கண்டுகளித்து இறை பக்தியில் ஆழ்ந்திருந்தார்கள்.

