• Sun. Mar 16th, 2025

நாகை நீலாயத்ஆட்சி அம்மன் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி…

ByR. Vijay

Feb 27, 2025

சக்தி பீடங்களில் ஆட்சி பீடமாக திகழும் நாகை நீலாயத் ஆட்சி அம்மன் திருக்கோவிலில் மகா சிவராத்திரி வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.சிங்கப்பூர், மலேசியா,ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய அஞ்சலி நடைபெற்றது,

நாகப்பட்டினம் நகராட்சி மையப் பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டு பழமையான அருள்மிகு காயா ரோகனும் சுவாமி உடனுறை நீலாயதாட்சி அம்மன் திருக்கோவில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ காயாரோகன , நீலாயதாட்சி அம்மன், நந்திபாகவான் சுவாமிக்கு பால் தயிர் தேன் சந்தனம் திருநீரு குங்குமம் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்கள் மற்றும் பூஜை செய்யப்பட்ட கலச புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டு வஸ்திரம், மலர்மாலை, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருநாகை நாட்டியாஞ்சலி 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு துபாய், சிங்கப்பூர், தும்குறு ஆஸ்திரேலியா, வெளிநாடுகளில் இருந்தும் சென்னை, பெங்களூர், மும்பை வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இரவு முழுவதும் 50க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைக்குழுவினர் பரதநாட்டியம் ஆடி இறைவனுக்கு புகழஞ்சலி செலுத்தினர்,
இரவு முழுவதும் நடைபெற்ற கலை நிகழ்ச்சியினர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.